உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் தாரா அபிஷேகம் செய்யப்பட்டுள்ள காட்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தாராபாத்திர அபிஷேகம்

Published On 2022-05-04 15:19 IST   |   Update On 2022-05-04 15:19:00 IST
அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபாத்திர அபிஷேகம் தொடங்கியது.
திருவண்ணாமலை:

அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபாத்திரம் அபிஷேகம் இன்று தொடங்கியது. வரும் 28-ந் தேதி வரை நடக்கிறது.

இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு தாரா அபிஷேகம் தொடங்கப்பட்டது. சிவலிங்கத்திற்கு மேல் செப்புப் பாத்திரத்தை தொங்கவிட்டு அதில் பன்னீர் சந்தனம் ஊற்ற­ப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை கோவில் மற்றும் அஷ்டலிங்கத்திற்கும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுள்ளது. 

Similar News