உள்ளூர் செய்திகள்
கடைகள்

மே 5-ந்தேதி வணிகர்கள் தினம்: நாளை கடைகள் அடைப்பு

Published On 2022-05-04 06:28 GMT   |   Update On 2022-05-04 06:28 GMT
வணிகர் தினத்தையொட்டி நாளை பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர். வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கிறார்கள்.

அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர்.

இதற்காக வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர்.

இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ஆர்.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன்தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று ஓட்டல்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்று உணவகங்களுக்கு 5-ந்தேதி காலை ஒருவேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது.

இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

பழைய பொருள் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News