உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

Published On 2022-05-04 05:57 GMT   |   Update On 2022-05-04 05:57 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,480-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு இருந்து வருகிறது. அட்சய திருதியையான நேற்று பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.38ஆயிரத்து 368க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 112 உயர்ந்து ரூ. 38 ஆயிரத்து 480க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 810 ஆக இருந்தது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 67க்கு விற்கிறது.

Tags:    

Similar News