உள்ளூர் செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு ரம்ஜான் சிறப்பு தொழுகை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
வேலூர்:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகை வேலூர் மாவட்டத்தி லும் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
வேலூர் திருப்பத்தூர் ராணி ப்பேட்டை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினார்கள்.
வேலூர்
வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, மேல்விஷாரம் மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியில் உள்ள உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்ஜான் கூட்டுத் தொழுகைக்கு தடை செய்யப்பட்டிருந்தது.
வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை
இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், கண்ண மங்கலம், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.