உள்ளூர் செய்திகள்
வேலூர் கோட்டையில் போலீஸ் குவிப்பு
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்பட 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கோட்டைக்கு வந்த கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
ரம்ஜான் விடுமுறையை ஒட்டி இன்று கோட்டை பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.