உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் மருத்துவ முகாம்

Published On 2022-05-03 15:00 IST   |   Update On 2022-05-03 15:00:00 IST
வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி:

தா.பேட்டை அருகே சேருகுடி கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் த.கலாவதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.குமரேசன் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆர்.மனோகரன், மாவட்ட கவுன்சிலர்எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.

அப்போது 1018 நபர்களுக்கு பொதுமருத்துவம், கண் பரிசோதனை, எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

 52 கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் டாக்டர்கள் ஜான்சிராணி, தரணி, கவுரி, ரமேஷ், சித்தா மோகன், செவிலியர்கள் உள்ளிட்டோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அசோகன், சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Similar News