உள்ளூர் செய்திகள்
வேலூர் அருகே ராணுவ வீரர் தூக்கிட்டு சாவு
வேலூர் அருகே ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் ஆனந்தபாபு (வயது 25). சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பணிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி பணிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வேலைக்கு சென்ற ஆனந்தபாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்த பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.