உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி
கோவில் திருவிழாவையொட்டி மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடி காந்தி நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
விழாவினையொட்டி பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி நடைபெறும். தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெற்ற கபாடி போட்டியில் சேலம், கோவை, திருநெல்வேலி, நாமக்கல், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன.
16 அணிகளுக்கு லீக் அடிப்படையில் 4 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வீராங்கனைகள் தங்கள் அபாரத்திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை பிடித்த திருநெல்வேலி பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு 30 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்த கோவை சிவக்குமார்ஸ்போ ர்ட்ஸ் க்ளப், சேலம் ஏவிஎஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆகிய அணியினருக்கு முறையே 20 மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணமும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பாக அமைக்கப்பட்ட மின்னொளி கலையரங்கைச் சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெண்கள் கபாடி போட்டியை கண்டு ரசித்தனர். காவல்த்துறையினர் 30க்கும் மேற்ப்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.