உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தொல்லியல் படிமங்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு

Published On 2022-05-02 14:04 IST   |   Update On 2022-05-02 14:04:00 IST
மாணவர்கள் கண்டுபிடித்த தொல்லியல் படிமங்கள் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்:


திருச்சி கல்லூரியின் மண்ணியல் பிரிவு இளநிலை 3-ம் ஆண்டு படிக்கும் 40 மாணவர்கள் மற்றும் 3 பேரசிரியர்கள் ஒருநாள் கள ஆய்வுக்காக பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் பகுதியில் தொல்லியல் படிமங்கள் மற்றும்

புதைவிடங்கள் காணப்படும் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 125 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் படிமங்களை (தலைக்காலி) கண்டெடுத்தனர். பின்னர், அந்த படிமங்களை கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

Similar News