உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

பள்ளிக்கூட வகுப்பறையில் ரகளை- ஆசிரியையை தாக்க முயன்ற 2 மாணவர்கள் சஸ்பெண்டு

Published On 2022-05-02 06:25 GMT   |   Update On 2022-05-02 06:25 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழித்துறை:

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் உற்சாகமாக வகுப்பு அறையிலேயே நடனமாடி உள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியை பயன்படுத்தும் நாற்காலியை மாணவர்கள் தூக்கி வைத்து ஆடுவது போன்றும் நாற்காலியை வைத்து ஆசிரியையை தாக்க முயல்வது போன்றும் காணப்பட்டது.

இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் குழித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறுகையில், மாணவர்களின் ஒழுங்கீன செயல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 2 மாணவர்களின் பெற்றோரையும் அழைத்துப் பேசினோம்.

அவர்கள் மாணவர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இருப்பினும் 2 மாணவர்களும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வில் மட்டும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News