உள்ளூர் செய்திகள்
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு- 46 வயது தொழிலாளி போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 46 வயது தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கி–புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 46). இவர் 2½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த குழந்தையின் பெற்றோர் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும–தித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.