உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமலுவிஜயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2022-05-01 15:08 IST   |   Update On 2022-05-01 15:08:00 IST
குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதி விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடியாத்தம் காட்பாடி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

முன்னாள் திமுக ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏகாம்பரம், நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ், திமுக பிரமுகர்கள் எம்.முத்து, எம்.சத்யமூர்த்தி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் குடியாத்தம் பகுதி பட்டியல் எழுத்தர் ஜி. வடிவேல் அனைவரையும் வரவேற்றார்.குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்ஏ. கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ்.உதயகுமார், மாவட்ட செயலாளர் பி. ஜெயப்பிரகாஷ் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு, கே வி குப்பம் பகுதி விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை இங்கு கொண்டுவந்து பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Similar News