உள்ளூர் செய்திகள்
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை பிரபாகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published On 2022-05-01 14:40 IST   |   Update On 2022-05-01 14:40:00 IST
பெரம்பலூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:


பெரம்பலூரில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

பெரம்பலூர் கால்நடை மருந்த வளாகத்தில் நடந்த முகாமிற்கு மண்டல இணை இயக்குநர் சுரேஷ்கிறிஸ்டோபர்  தலைமை வகித்தார். உதவி இயக்குநர்கள் மும்மூர்த்தி, குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகொண்டு வெறிநோய் தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்து அரசின் புதிய திட்டங்களான தொகுதிக்கு ஒரு ‘நடமாடும் கால்நடை மருத்துவமனை மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஆதரவற்ற விலங்கினங்களுக்கான  வள்ளலார் காப்பகம் ஆகிய திட்டங்கள் குறித்து பேசினார்.

கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்கள் ராமன் மற்றும் டாக்டர் ஜவஹர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெளிநோய் தடுப்பூசி செலுத்தினர்.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Similar News