உள்ளூர் செய்திகள்
பெரம்பலூருக்கு வருகை தந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயண குழுவினருக்கு வரவேற்பு அளித்த போது எடுத்த பட

சைக்கிள் பிரசார பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு

Published On 2022-05-01 14:24 IST   |   Update On 2022-05-01 14:24:00 IST
பெரம்பலூருக்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:


பெரம்பலூருக்கு நேற்று வருகை தந்த இந்திய ஜனநாயக வாலிபர்சங்க சைக்கிள் பயண குழுவினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு வேலை கொடு  பொதுதுறையை தனியாருக்கு விற்க்காதே  என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை , புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளிலிருந்து திருச்சியை நோக்கி சைக்கிள் பயணம் கடந்த 21ம்தேதி முதல் நடந்து வருகிறது.  

இதன் ஒரு பகுதியாக இந்த சைக்கிள் பயண குழுவினர் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் திருமாந்துறை டோல்பூத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து  பெரம்பலூருக்கு வந்த இக்குழுவினருக்கு மக்களுக்கான மருத்துவ கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தலைமையில்  

மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடந்தது.

Similar News