உள்ளூர் செய்திகள்
போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

வீடுகளில் திருடிய கும்பல் கைது

Published On 2022-04-30 15:04 IST   |   Update On 2022-04-30 15:04:00 IST
கும்பகோணம் பகுதியில் பூட்டிய வீட்டில் திருட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பட்டீஸ்வரம்:

தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உததரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் தனிப்படையினர் கும்பகோணம் பகுதியில் தீவிர வாகன சோதனையிலும் , கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பூட்டிய வீட்டில் திருடிய கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனை தொடர்ந்து கும்பகோணம் தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மறைந்திருந்த கும்பகோணம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த  பாரத் (வயது 30), கவியரசன்(34), கார்த்தி(36) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றிய கும்பகோணம் தனிப்படை போலீசார் தாலுகா நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Similar News