உள்ளூர் செய்திகள்
வேலூர் அருகே படிக்க சொல்லி வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
வேலூர் அருகே படிக்க சொல்லி வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகள் பிரவீனா (வயது18) விநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால் இவருக்கு சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பரீட்சை நெருங்குவதால் மாணவியை அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு வற்புறுத்தினர்.
இதனால் மனமுடைந்த மாணவி பிரவீனா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரீட்சைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. நன்றாக முயற்சி செய்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்கள் நன்மைக்காகத்தான் மாணவர்களை படிக்குமாறு வற்புறுத்துகிறார்கள்.
இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே மாணவ மாணவிகள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.