உள்ளூர் செய்திகள்
மீட்பு

பொன்னேரி அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

Published On 2022-04-28 06:18 GMT   |   Update On 2022-04-28 06:18 GMT
பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் அளந்து கல் பதித்து மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரு.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி கனகவல்லிபுரம் பகுதியில் அரசு நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவுப்படி பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 5 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்வது தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் அளந்து கல் பதித்து மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரு.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா ரஜினி, ஊராட்சி தலைவர் பிரியா ராஜேஷ்கண்ணா மற்றும் வருவாய் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News