உள்ளூர் செய்திகள்
தஞ்சை தேர் விபத்து

தேர் விபத்தில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

Published On 2022-04-28 11:17 IST   |   Update On 2022-04-28 11:17:00 IST
தஞ்சை அருகே களிமேடு தேர் விபத்தில் பலத்த காயமடைந்த 8ம் வகுப்பு மாணவனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே களிமேட்டில் அப்பர்சாமி தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் இறந்தனர். இந்த விபத்தில் பிரகாஷ் மகன் கவுசிக் (வயது 13), அருண்குமார் (24), ஹரிஷ்ராம் (13), ரவிச்சந்திரன் (48) உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 8ம் வகுப்பு மாணவன் கவுசிக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுசிக்கின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவரின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். எப்படியாவது கவுசிக்கை காப்பாற்றி விட வேண்டும் என்று கண்காணித்து உயர்தர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் தவிர மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று களிமேடு மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

Similar News