உள்ளூர் செய்திகள்
ஆற்காடு அருகே தனியார் பஸ் டிரைவர் அடித்து கொலை?
ஆற்காடு அருகே தனியார் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை பள்ள நாகனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 40). தனியார் பஸ்சில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரசாந்த் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று வெங்கடேசனின் தந்தைக்கு நினைவு நாள் என்பதால் பூமாலை மற்றும் பூஜைப் பொருட்கள் வாங்க கலவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் பூஜை பொருட்கள் வாங்கச் சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வெங்கடே-சனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் வெங்கடேசனை கண்டு-பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பல்லடம் ஏரி அருகே உள்ள விவசாய பம்புசெட்டில் வெங்கடேசன் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய் சிம்பா வரவழைத்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக் கவில்லை. இதையடுத்து வெங்கடேசனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை-க்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.