உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2022-04-26 10:09 GMT   |   Update On 2022-04-26 10:09 GMT
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே செங்குணம் கை.காட்டி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வரும் 29ந்தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 29ந்தேதி நாட்டு கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள் மற்றும் வளர்க்கும் முறை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, கோழி குஞ்சுகளை பராமரிக்கும் முறை,  இனப்பெருக்க மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 93853 07022 தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News