உள்ளூர் செய்திகள்
புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்விக்கும் சிவாச்சாரியார்கள்.

கோவில் குடமுழுக்குவிழா

Published On 2022-04-26 15:24 IST   |   Update On 2022-04-26 15:24:00 IST
பட்டமரத்தான் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட கல்லிலான வசந்த மண்டபம் குடமுழுக்குவிழா தொடங்கியது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட கல்லிலான வசந்த மண்டபம் குடமுழுக்குவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விக்னேஸ்வரபூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று நேற்று பட்டமரத்தானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து காலை 10.35 மணியளவில் வைரவன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை ஊற்று குடமுழுக்கு செய்வித்தனர்.

சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். குடமுழுக்கு விழா வர்ணனைகளை தமிழாசிரியர் முருகேசன் தொகுத்து வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துறையினரும், விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.

தொடர்ந்து நாளை (27-ந்தேதி) வட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. 29ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்கி 1ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Similar News