உள்ளூர் செய்திகள்
பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை அமைச்சர் திறந்துவைத்த போது எடுத்தப்படம்.

பல்துறை பணிவிளக்க கண்காட்சி

Published On 2022-04-26 15:19 IST   |   Update On 2022-04-26 15:19:00 IST
பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்துவைத்தார்.
பெரம்பலூர்:

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர  தின விழா  சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள  பல்துறை  பணிவிளக்க  கண்காட்சியினை போக்குவரத்துத்துறை  அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர் மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் திறந்து வைத்து  பார்வையிட்டனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, கனிமவளத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டஅரசுத்துறைகளின் அரங்குகளை துவக்கி வைத்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் அரசின் திட்டங்கள் குறித்த விளக்க பதாகைகளை பார்வையிட்டு, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 328 நபர்களுக்கும் 10 வேளாண்மை குழுவினர்களுக்கும் என  ரூ.80.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

Similar News