உள்ளூர் செய்திகள்
கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-04-26 15:17 IST   |   Update On 2022-04-26 15:17:00 IST
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் :

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹிந்து நாடார் கல்லூரியில், கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், வணிகவியல் தொடர்பான சைகை நாடகம், குறும்படம், ரங்கோலி, வணிகம் தொடர்பான வினாடி வினா, மணப்பெண் அலங்காரம், நெருப்பில்லா சமையல், புகைப்படம் எடுத்தல், கழிவுகளிலிருந்து கலைப் பொருள்கள் தயாரிப்பு உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இப் போட்டிகளில், நெருப்பில்லா சமையல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகிய போட்டிகளில் 2 ஆம் இடத்தையும், குறும்படத்தில் 3 ஆம் இடத்தையும் வென்று பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர். இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி முதல்வர் முனைவர் வெற்றிவேலன், துணை முதல்வர் பேராசிரியர் ரவி, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர்கள் முனைவர் கார்த்திகா, முனைவர் குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News