உள்ளூர் செய்திகள்
பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு வழங்கிய போது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-04-26 15:02 IST   |   Update On 2022-04-26 15:02:00 IST
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரம் துவார் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அண்ணா அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள

துவார் ஊராட்சியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண் வளப்பாதுகாப்பு மற்றும் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

 முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன் கலந்துகொண்டு மண் வளத்தின் முக்கியத்துவம், மண் வளம் பாதுகாப்பதன் அவசியம் மண் பரிசோதனையின் அவசியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் பேசும்பொழுது, மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுவதால் உர செலவினை குறைத்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என எடுத்துரைத்தார்.

பயிற்சி முகாமில் வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் நெல்சன் நவமணி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக அனைவரையும் துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் நன்றி கூறினார்.

Similar News