உள்ளூர் செய்திகள்
கைது

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய பீகார் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-04-26 14:58 IST   |   Update On 2022-04-26 14:58:00 IST
வேலூர் தோட்டப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய பீகார் வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது சலாவுதீன் (வயது 38). பொம்மை வியாபாரி. வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இவரது வீட்டின் அருகே உள்ள தெருவின் வழியாக தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை முகமது சலாவுதீன் நோட்டமிட்டு வந்துள்ளார்.

நேற்று காலை மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. முகமது சலாவுதீன் மாணவி முன்பு சென்றார். திடீரென அவரது ஆடைகளை அவிழ்த்து மனைவியை பார்த்து சைகை காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டபடி வீட்டுக்கு ஓடிச் சென்றார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது முகமது சலாவுதீன் தனது ஆடைகளை அவிழ்த்து சைகை காட்டியதாக மாணவி தெரிவித்தார்.

பொதுமக்கள் முகமது சலாவுதீனை மடக்கிப் பிடித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மாணவி முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் முகமது சலாவுதீனை கைது செய்தனர. பின்னர் அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News