உள்ளூர் செய்திகள்
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்திக் கூடத்தை பெல் நிறுவன தலைவர் துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ராணிபேட்டை பெல் நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் தொடக்கம்

Published On 2022-04-25 15:29 IST   |   Update On 2022-04-25 15:29:00 IST
ராணிபேட்டை பெல் நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தை பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான நளின் சிங்கல் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காற்று மண்டலத்திலிருந்து 99.5 சதவிகிதத் தூய்மையுடன் பிரித்தெடுக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் நமது தொழிலகத் தேவையை நிறைவு செய்வதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவும். இங்கு உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கொரோனா அலைகளின் போது, உயிர் காக்க பெரிதும் உதவும் என்றார்.

Similar News