உள்ளூர் செய்திகள்
சமூகநல்லிணக்கதிருவிழாவாகநடைபெற்றஇஃப்தார் நிகழ்ச்சியை படத்தில் காணலாம்.

சமூக நல்லிணக்க விழாவாக இப்தார் நிகழ்ச்சி

Published On 2022-04-25 15:02 IST   |   Update On 2022-04-25 15:02:00 IST
சமூக நல்லிணக்க திருவிழாவாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியி ன் சார்பில் அன்பால் இணைவோம் என்ற தலைப்பில் தனியார் திருமண மண்டபத்தில்  சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்வு ம.ஜ.க. மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில்  நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ம.ஜ.க. மாநில செயலாளர்கள்  துரை முஹம்மது, பேரை அப்துல் சலாம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சம்பத், மாரிக்கண்னு, உதவி தொடக்க கல்வி அலுவலர்  திருமேணிநாதன் ( ஓய்வு  ) ரோட்டரி சங்கம்  ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிலாவிடுதி மோகன், ஜமாஅத் கமிட்டி தலைவர்  கலிபுல்லா, தமிழரசன், வர்த்தக சங்க, வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஜமாத்தார்கள்,  மஜக மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

 முன்னதாக  கலீல் ரஹ்மான் உலவி ஹஜ்ரத் கிராத் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார்   இறுதியில்  மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.

Similar News