உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு

Published On 2022-04-25 14:59 IST   |   Update On 2022-04-25 14:59:00 IST
குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளத்தைச் சேர்ந்த மணி மகன் கோபு ( வயது 32).இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைக ள் உள்ளனர். இந்நிலையில்  கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கோபு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த சிலர் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்ற தீயணைப்பு நிலையத்தினர் நீண்ட நேரம் தேடி கோபுவை சடலமாக மீட்ட னர்.  இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேல் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News