உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

குழந்தைகளின் உடல் நலத்திலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்

Published On 2022-04-25 14:44 IST   |   Update On 2022-04-25 14:44:00 IST
கல்வியில் மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் நலத்திலும் பெற்றோர்கள்கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில்  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப்  பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, கிராமங்கள் வளர்ச்சியையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. பெற்றோர்கள், பள்ளிக் குழந்தைகளின் கல்வி  முன்னேற்றத்தை கவனிப்பதோடு அவர்களின் உடல்நலனையும் பேணிகாக்கும் வகையில், சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். கல்வியில் சிறந்தோங்க தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளாட்சியில் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு 50 சதவீதம் தமிழக அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பில் பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

Similar News