உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தாரின் பாரம்பரிய வழிபாடு

Published On 2022-04-24 15:07 IST   |   Update On 2022-04-24 15:07:00 IST
வைத்தீஸ்வரன்கோவிலில் 26-ந்தேதி நகரத்தாரின் பாரம்பரிய வழிபாடு நடைபெறுகிறது. இதில் பல ஆண்டுகளாக மாட்டு வண்டிகளில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் செல்வமுத்துக்குமார சுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்கள் ஆண்டுதோறும் தைமாதம் செவ்வாய்கிழமை தங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபடுவர்.

காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருவர். இந்த பாதயாத்திரை பக்தர்கள் ஆண்டாண்டு காலமாக பல பல நூறு கிலோ மீட்டர் நடை பயணமாக வந்து வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் தேவையான பொருட்கள், உடைகள் போன்றவைகளை ஒரு மாட்டு வண்டியில் வைத்து அவர்கள் பாதயாத்திரையாக வருவர்.

பாதயாத்திரை பக்தர்கள் ஒரு புறம் சாலையோரம் வரிசையாகவும், அவர்களை எடுத்து வரும் மாட்டு வண்டிகள் வரிசையாக வரும். சாலையில் வருவதை ஆங்கங்கே உள்ள பொதுமக்கள் பார்த்து மகிழலாம். பாதயாத்திரையாக வரும் மக்கள் மஞ்சள் தடவி வேப்பிலை செருகிய வழிபாடு குச்சியை கையில் எடுத்து வந்து சுவாமி முன்பு வழிபட்டு அங்குள்ள கோயில் கொடிமரம் முன்பு விட்டுச் செல்வர். பாரம்பரியமாக தொடரும் இந்த வழிபாடு நிகழ்ச்சி நாளை மறுதினம் 26&ந்தே¤ செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி லாமெக் தலைமையில். போலீசார் செய்து வருகின்றனர் பாதயாத்திரை பக்தர்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகளும், சிறப்பு அரசு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News