உள்ளூர் செய்திகள்
வாலாஜா பஜாரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த காட்சி.

வாலாஜா பஜாரில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-23 15:57 IST   |   Update On 2022-04-23 15:57:00 IST
வாலாஜா பஜாரில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் உள்ள தினசரி மார்கெட்டில் நேற்று மாலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். 

வாலாஜா எம்.பி.டி. ரோடு, தினசரி மார்கெட், அனந்தலை ரோடு, அனைக்கட்டு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது டீ கப், பிளாட்டிக் பிளேட், கவர் உள்ளிவை களை பறிமுதல் செய்தார்.

சுமார் 35 கடைகளுக்கு மேல் ஆய்வு செய்து 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அந்த கடைகளுக்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 500 அபராதம் விதிக்க நகராட்சி நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வருவாய்த் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News