உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பாரதி நகரில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவல கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் அ.அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், பொருளாளர் கண்ணையன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளரும் எம்.எல்.ஏவுமான ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தேர்தல் பொறுப்பாளர் திருவண்ணாமலை தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமை கழக வழக்கறிஞரணி சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினர்.
கூட்டத்தில் நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.