உள்ளூர் செய்திகள்
வலையில் இருந்து மீன்களை எடுக்கும் மீனவர்கள்.

மீன்பிடி தடைகாலத்தால் மீன்களின் விலை இருமடங்கு உயர்வு

Published On 2022-04-23 13:44 IST   |   Update On 2022-04-23 13:44:00 IST
வேதாரண்யத்தில் மீன்பிடி தடைகாலத்தால் மீன்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்-களில் இருந்து நாள்தோறும் குறைந்த அளவிலான பைபர் படகுகள் 5 கடல்மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

நாள்தோறும் மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடிக்க சென்று காலையில் கரை வந்து சேருகின்றனர். மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்-கெளுத்தி, மத்தி மீன்கள், நண்டு இறால் குறைந்த அளவில் கிடைக்கின்றன. 

மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் பைபர் படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு போகின்றன.

தற்போது வாவல் மீன் கிலோ 800 ரூபாய்க்கும், காலா மீன் 600 ரூபாய்க்கும், இறால் 400-க்கும், நீலக்கால் நண்டு 700-க்கும், மத்திமீன் 70 ரூபாயக்கும் விற்பனை ஆகிறது.
 
தற்போது அனைத்து வகைமீன்களும் 100 முதல் 200 வரைவிலை உயர்ந்-துள்ளது.  குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன்கள் அதிகம் வரததால் கோழி, ஆட்டு கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இன்னும் ஒரு வார காலத்தில் இப்பகுதியில் ஏரி குளம், குட்ட களில் நாட்டு மீன்கள் பிடிக்க துவங்குவர்கள் அப்பொழுது விரல், கெண்டை சிலேபி நறுவை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் விலையும் குறையும் என மீன் பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Similar News