உள்ளூர் செய்திகள்
சாலை பணிகள் பாதியில் நிற்கும் காட்சி

திட்டச்சேரி-திருமருகல் சாலை பணிகள் முடிக்கப்படுமா?

Published On 2022-04-23 13:38 IST   |   Update On 2022-04-23 13:38:00 IST
திட்டச்சேரி-திருமருகல் இடையே சாலை சீரமைப்பு பணிகள் உடன் முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நாகை&நன்னிலம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக அன்றாடம் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 

மிகவும் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான இந்த சாலை திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை சேதமடைந்து இருந்தது.

இச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திட்டச்சேரியில் 5 இடங்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டது. 

இன்றுவரை ஜல்லி கற்கள் மேல் தார்சாலை அமைக்கப்-படாமல் அப்படியே உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படு-கின்றனர். மேலும் இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெயர்ந்து கிடைக்கும் ஜல்லி கற்கள் தெரியாமல் இடறி கீழே விழுந்து விபத்துக்-குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

எனவே திட்டச்சேரி-திருமருகல் இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைக்கும் பணியினை உடன் முடிக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News