உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-23 06:29 GMT   |   Update On 2022-04-23 06:29 GMT
ஊராட்சி மன்ற தலைவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும்.

திருத்தணி:

திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகள் உள்ளன. நேற்று, 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்படும் பணிகளுக்கு ‘பேக்கேஜ்’ டெண்டரை கைவிட்டு ஒன்றிய அளவில் டெண்டர் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து சமரசம் செய்தார்.

Tags:    

Similar News