உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை
ஆற்காட்டில் சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு டவுன் ராமசாமி தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 56). இவரது மனைவி தனலட்சுமி. மகன் மணிகண்டன். மணிகண்டன் டிப்ளமோ படித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் இருந்த திருமால் திடீரென காணாமல் போனார். இதனைக் கண்ட அவரது மகன் மணிகண்டன் தந்தையை தேடி கொண்டு சென்றார். வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் உள்ள ஒரு தெரு சந்தில் திருமால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனைக் கண்ட மணிகண்டன் கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து திருமாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அதற்குள் திருமால் துடிதுடித்து இறந்தார். அவரது தலையின் பின்பக்கத்தில் இரும்பு ராடால் தாக்கிய காயங்கள் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலின் மனைவி தனலட்சுமி, மகன் மணிகண்டன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமால் கொலை செய்யப்பட்ட இடத்தில் கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. இதனை திருமால் தட்டிக் கேட்டதால் அவரை கஞ்சா வியாபாரிகள் கொலை செய்தார்களா? அல்லது முன்விரோத காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.