உள்ளூர் செய்திகள்
விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை படத்தில் காணலாம்.

காவேரிப்பட்டணம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய 3 காட்டு யானைகள்

Published On 2022-04-22 15:23 IST   |   Update On 2022-04-22 15:23:00 IST
காவேரிப்பட்டணம் அருகே விவசாய விளைநிலங்களை 3 காட்டுயானைகள் முகாமிட்டு சேதப்படுத்தியுள்ளது.
காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தாளமடுவு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இன்றுகாலை 3 காட்டுயானைகள் அந்த கிராம பகுதியில் முகாமிட்டு விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தியது. 

இதனால் அதிர்ச்சி விவசாயிகள் அடைந்த அந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கேயே சுற்றித்திரிந்தது.

 இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்றுகாலை காட்டுயானைகள் விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Similar News