உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,ஏப்.22-
கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி செந்தில் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் கோவில் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி (51). இவர்களுக்கு திருமணமாகி, 24 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். இதனால் சுமதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சுமதிக்கு மருத்துவபரிசோதனை செய்த நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு திரும்பியுள்ளனர்.
இரவு கோவிலுக்கு அருகில் வழங்கப்பட்ட வீட்டிலேயே இருவரும் தங்கிய நிலையில், நேற்று காலை சுமதியை காணவில்லை. அவரது கணவர் வெங்கடேசன், சுமதியை தேடி அலைந்த போது, அருகிலுள்ள கிணற்றில் பிணமாக மிதந்த சுமதியை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு படையினர் சுமதியின் உடலை மீட்டனர். சுமதி கிணற்றில் குதித்து தற்கொ¬ செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.