உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

வீட்டில் பதுக்கி வைத்த 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது

Published On 2022-04-22 06:33 GMT   |   Update On 2022-04-22 06:33 GMT
கூடுவாஞ்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்த 25 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
வண்டலூர்:

கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர், முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி சசிகலாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனர்.அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து வீட்டில் இருந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுரேஷ், சாகுல் அமீது, ஜாகீர் உசேன், மணிகண்டன், பிரபாகரன் ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்து சுமார் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் ரே‌ஷன் அரிசியை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் இதற்கு உடந்தையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசிமூட்டைகள் காஞ்சிபுரத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News