உள்ளூர் செய்திகள்
அரிக்கமேடு பகுதியில் மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்ட காட்சி.

பள்ளி மாணவர்கள் களப்பயணம்

Published On 2022-04-22 09:39 IST   |   Update On 2022-04-22 09:39:00 IST
அரிக்கமேடு பகுதிக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி:

புதுவை பாரத் வித்யாஸ்ரமம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் மற்றும் அரிக்கமேடு ஆகிய இடங்களுக்கு களப் பயணம் மேற்கோண்டனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அருண் நாகலிங்கம் வரவேற்று நோக்க உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக அரிக்கமேடு கல்வி மையம் நிறுவனத் தலைவர் ரமேஷ்  பங்கேற்றார். அவர் தலைமையில் அரிக்கமேடு அகழாய்வுத் தளத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். 

அரிக்கமேட்டின் சிறப்பு, வரலாறு, பண்டைய காலத்தில் வர்த்தகம் நடை பெற்றதற்கான சான்றுகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Similar News