உள்ளூர் செய்திகள்
சிந்தனையாளர் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

பாரதிதாசன் நினைவு கருத்தரங்கம்

Published On 2022-04-22 04:06 GMT   |   Update On 2022-04-22 04:06 GMT
பாரதிதாசன் நினைவுநாளையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தேவிதாசன் அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் நினைவுநாளையொட்டி சிறப்பு கருத்தரங்கம் ஜோதி கண்மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. 

கருத்தரங்கத்துக்கு தமிழ் அறிவியல் ஆய்வறிஞர் தாமரைக்கோ தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை செயலாளர் காமராசு வரவேற்புரையாற்றினார். பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார்.

கருத்தரங்கில் மக்கள் வாழ்வுரிமை இயக்க  செயலாளர்  ஜெகநாதன், தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், படைப்பாளர் இயக்கம் சீனு.தமிழ்நெஞ்சன், கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, சுவடுகள் இலக்கிய பேரவை செல்வமணி அசோகன் ஆகியோர்  உரையாற்றினர். இதில் தேவிதாசன் அறக்கட்டளை நிறுவனர் தேவிதிருவளவன், பேரவை துணைத்தலைவர் கவுசல்யாதேவி, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் வளர்ச்சிதுறை அமைக்க வேண்டும், தமிழ் விருதுகள் வழங்கவேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 29ந் தேதி பாரதிதாசன் பிறந்தநாளில் சுதேசி மில் அருகே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News