உள்ளூர் செய்திகள்
பனப்பாக்கம் அருகே பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
பனப்பாக்கம் அருகே பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) இவர் நேற்று ஓச்சேரியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் ஜங்சன் சாலையில் வரும் வாகனங்களை மடக்கி அதை சேதபடுத்தும் நோக்கில் எட்டு உதைப்பது தகாத வார்த்தைகளால் திட்டியும் மக்களை அச்சுறுத்தி நான் ஒரு ரவுடி என பொது இடத்தில் இடையூறு செய்த வாலிபரை அவலூர் போலிசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் ககேட்காததால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.