உள்ளூர் செய்திகள்
லாஸ்பேட்டை கோளரங்கத்தில் பூஜ்ய நாள் விழாவை மாணவர்கள் கண்டுகளித்தனர்.

புதுச்சேரியில் பூஜ்யம் நிழல் நாள்

Published On 2022-04-21 14:04 IST   |   Update On 2022-04-21 14:04:00 IST
புதுவை அறியவில் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சூற்றுச்சூழல் துறை சார்பில், பூஜ்யம் நிழல் நாள் குறித்த விளக்க நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:

புதுவை அறியவில் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சூற்றுச்சூழல் துறை சார்பில், பூஜ்யம் நிழல் நாள் குறித்த விளக்க நிகழ்ச்சி கடந்த 19-ந் தேதி லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் நடந்தது.

அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி முன்னிலை வகித்து பூஜ்யம் நிழல் நாள் குறித்து விளக்கினார். சூரிய வெளிச்சத்தில் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தின் போது அதிக நீளத்தோடு இருக்கும். 

பின்னர் படிப்படியாக குறைந்து உச்சி வேளையில் மிகக்குறைவாக இருக்கும். 
பிறகு, சூரியன் மறையும்  வரை அதிகமாகிக்கொண்டே செல்லும். ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச்சரியாக கீழே  விழுவதால், உச்சி வேளையில்கூட நிழல் காண முடியாது. 

இதுவே பூஜ்ய நிழல் நாள் எனப்படுகிறது. இந்த பூஜ்யம் நிழல் நாள் காரைக்காலில் நிகழ்ந்தது. 
பூமி  தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமியின் அச்சு சூரியனை சார்ந்து 23.45 டிகிரி  கோணத்தில் சாய்வாக சுற்றுவதால் பருவநிலை மாற்றம் உண்டாகிறது. இந்த பூஜ்யம் நிழல் நாள் நிகழ்வை லாஸ்பேட்டை கோளரங்கம், சுத்துக்கேணி அரசு உயர்நிலைப்பள்ளி, வழு தாவூர் அரசு உயர் நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, உறுவையாறு அரசு உயர்நிலைப்பள்ளி, சன்னியா சிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கண்டுகளித்து விளக்கம் பெற்றனர். 

Similar News