உள்ளூர் செய்திகள்
தொழில் பழகுனர் முகாமை விண்ணப்பம் வழங்கி அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார். அருகில் கென்னடி எம்.எல்.ஏ.

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

Published On 2022-04-21 08:30 GMT   |   Update On 2022-04-21 08:30 GMT
புதுவை அரசின் தொழிலாளர் துறை, பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடந்தது.
புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப் பாளையம் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., காரைக்காலில் 
டி.ஆர்.பட்டினம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மாகி,  ஏனாமிலும் முகாம் நடந்தது. தொழிற் பயிற்சி முடித்தவர்கள், 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், திறன் பயிற்சி பெற்றவர்கள், பட்டயப் படிப்பு, பட்ட தாரிகள் முகாமில் பங்கேற்றனர். 

பயிற்சியில் சேர்வோருக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படும். பயிற்சி காலம் 12 மாதம் முதல் 36 மாதம் வரையாகும்.

 வம்பாகீரப்பாளையத்தில் நடந்த முகாமை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.  முகாமில் அனிபால்கென்னடி பேசியதாவது:-
போக்குவரத்து துறை மூலம் உப்பளம் தொகுதியில் டெம்போ, மினிபஸ் வசதிகள் செய்துதர வேண்டும். மெரீனா கடற்கரைக்கு பஸ் வசதி செய்துதர வேண்டும். இந்த பயிற்சி முகாமில் 40 கம்பெனிகள் வந்துள்ளன. இந்த பயிற்சி முகாமை இளைஞர்கள் பயன்படுத்தி கற்றுக்கொண்டு வேலை வாய்ப்பை பெற வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்சந்திர பிரியங்கா பேசியதாவது:-

மக்களுக்கு தேவையான வற்றை செய்ய வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மக்களுக்கான அரசாங்கம் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி வரும்கால இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே எண்ணம். தொழிலாளர் துறை அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். 

அவர்களின் முயற்சியால் பயிற்சி முகாமை நடத்து கின்றனர். வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் படித்த இளைஞர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் நன்றாக பயிற்சி பெற்றால் சிறப்பாக செயல் படுபவர்களை நிறுவனத் தினரே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News