உள்ளூர் செய்திகள்
காலாப்பட்டு ஜெயில்

சரக்கு-சைடிசுக்காக மீன் திருடிய வாலிபர்கள்

Published On 2022-04-21 12:39 IST   |   Update On 2022-04-21 12:39:00 IST
சரக்கு-சைடிசுக்காக மீன் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி:

வறுமையின் காரணமாக சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம்.

சிலர் எளிதில் பணம் கிடைக்க வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர். 

ஆனால், புதுவையில் மது குடிக்கவும், மதுவுக்கு சைடிஷ் தயாரிக்கவும் மீன்களை திருடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுவை ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் தனக்கு சொந்தமான மீன்களை, பெரிய மார்க்கெட் மீன் அங்காடியில் ஐஸ் பெட்டியில் வைத்திருந்தார். மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த நிலையில் கடந்த 15ந்தேதிக்கு பின் மீன் விற்பனை செய்ய மீன் பெட்டியை ராஜேஷ் திறந்து பார்த்தார். 

ஐஸ் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்  நடைபாதையில் வசிக்கும் விஜய்(22), சதீஷ்(22) மற்றும் குரு ஆகியோர் மீன்களை திருடியது பதிவாகியிருந்தது.  

இதையடுத்து விஜய், சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடிய குருவை தேடி வருகின்றனர். 

இவர்கள் இரவு நேரத்தில் சாலையோரத்தில் தங்கி, நகர பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், இரவில் ஐஸ்பெட்டிகளை திறந்து மீனை திருடி விற்று மது வாங்கியதும் தெரிய வந்தது. 

மது அருந்த சைடிசுக்காக திருடிய மீனை சமைத்து தின்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News