உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மீனவர்கள் மோதல்:பீர்பாட்டில் குத்து

Published On 2022-04-21 12:26 IST   |   Update On 2022-04-21 12:26:00 IST
வீராம்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.
புதுச்சேரி:

புதுவை வீராம்பட்டினம் சிவாஜிநகரை சேர்ந்தவர் செல்வம்(வயது48). மீனவர். தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் செல்வம் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

செல்வம்  வீராம்பட்டினம் கடற்கரையில் காற்று வாங்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பொட்டுக்கடலை என்ற மணிகண்டனுடன் செல்வம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மற்றொரு மீனவரான ஜெயசீலன் என்பவர் செல்வத்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி மணிகண்டன் என்ன பெரிய ஆளா? அவனுடன் பேசிக் கொண்டு இருக்கிறாய்? என்று திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் செல்வத்தின் முகத்தில் குத்தினார்.

இதனை செல்வம் தட்டிக்கேட்ட போது மீண்டும் அவரை பீர்பாட்டிலாலும், கையாளும் தாக்கிய ஜெயசீலன் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

இந்த தாக்குதலில் முகம், மூக்கு, நெற்றியில் பலத்த காயமடைந்த செல்வத்தை அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மீட்டு சிகிச்சைக்காக  புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்ற செல்வம் பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News