உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமனம்

Published On 2022-04-21 06:15 GMT   |   Update On 2022-04-21 06:15 GMT
சேலம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்: 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயலாக்கம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு குறைதீர் அலுவவலர்கள் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்-டத்துக்கு குறைதீர் அலுவலராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரப்பெறும்  புகார்  மனுக்களை  பெற்று  புகாரினை பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்வார். புகார் மனு தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்வார். வலைதளத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ள ஊதியத்தை தாமதமாக வழங்குதல் மற்றும் வேலையில்லாப் படி வழங்குதல் உள்ளிட்ட குறைகளை தாமாக முன்வந்து நடவடிக்கை  மேற்கொள்வார். 

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட  செயலாக்கம்  தொடர்பான புகார்களுக்காக குறைதீர்  அலுவலர் காந்திமதியை மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளம், அறை எண்.214,  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News