உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு டி.சி. வழங்க மறுத்தால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-04-20 16:32 IST   |   Update On 2022-04-20 16:32:00 IST
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு டி.சி. வழங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அப்போது கலெக்டர் கூறுகையில்:-

வேலூர் மாவட்டத்தில் இடைநின்ற பள்ளி மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை மலைகிராமங்களில் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் பீஞ்சமந்தையில் உள்ள ஆண்கள் விடுதி தற்போது மாணவி-கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஆண்கள் விடுதி செயல்படுத்தப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளுக்கு டி.சி கொடுக்க மறுத்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு டிசி கொடுக்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பள்ளி மேலாண்மை மறு-கட்ட-மைப்பு முதற்கட்டமாக 151 அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பள்ளி மேலாண்மை குழு மறு-கட்டமைப்பு சார்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்-புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் 7 வாகனங்கள் 8 ஒன்றியங்-களில் பொது-மக்கள் அதிகமாக கூடும் 140 இடங்களில் நடமாடும் ஊர்திகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News