உள்ளூர் செய்திகள்
வாலாஜா சங்கர மடத்தில் மண்டலாபிஷேக, அனுஷ நட்சத்திர விழா
வாலாஜா சங்கர மடத்தில் மண்டலாபிஷேக, அனுஷ நட்சத்திர விழா நடைபெற்றது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சங்கர மடம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் வாலாஜா தாலுக்கா கிளை மற்றும் ஸ்ரீ ஆதிசங்கரர் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மண்டலாபிஷேகம் மற்றும் அனுஷ நட்சத்திர விழா சங்கர மடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான பாகவதர் கோடையிடி கோபால சுந்தர பாகவதரின் தலைமையில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாலாஜா சங்கர மடத்தின் செயலாளர் ராஜசேகரன், தலைவர் சுந்தரேசன், ரவிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பதிவுபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வாலாஜா தாலுக்கா செயலாளர் வழக்கறிஞர் சிவசிதம்பரம் அனைவ-ரையும் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட தலைவர் பெல் கிருஷ்ணகுமார் மற்றும் பல்லவர் நகர் சுவாமிநாத சர்மா, ரவி, ரமணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
தமிழ்நாடு பிராமணர் சங்க வாலாஜா தாலுகா தலைவர் கல்யாணராமன், துணைத் தலைவர் வழக்கறிஞர் சிவலிஙகசர்மா, குமார், கிளை அமைப்பாளர் சந்திரசேகரன், ஜெயகாந்தன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.