உள்ளூர் செய்திகள்
ஓசூர் பகுதியில் கோடைகால நோய் தாக்கம்: ரோஜா உற்பத்தி கடும் பாதிப்பு விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நோய் தாக்கம் காரணமாக ரோஜா உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டாரத்தில் ரோஜா உள்ளிட்ட கொய்மலர் கெடிகளில் கோடை கால நோய் மற்றும் பூச்சி தாக்கத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம், போன்ற அலங்கார கொய்மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஆண்டுதோறும் நவ. மற்றும் டிசம்பரில் குடும் குளிரால் செடிகளில் டவுனியா நோய் தாக்கம் ஏற்பட்டு உற்பத்தி குறையும், அதேபோல் கோடையில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்கல் ஏற்படும் கொரோனாவில் ஏற்றுமதி பாதித்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், தற்போது தான் மெல்ல மீண்டு வருகின்றனர்.
தற்போது செடிகளில் கோடைகால பூச்சிகளான இலைபேன், சாறு உறிஞ்சும் பூச்சி சிகப்பு, வெள்ளை சிலந்தி மற்றும் வெள்ளை பூஞ்சான் நோய் ஆகியவை, ரோஜா உள்ளிட்ட கொய்மலர் செடிகளை தாக்கி வருகிறது.
இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நாளொன்றுக்கு, 2500 ரோஜா சாகுபடியான நிலையில் தற்போது, 1,700 பூக்கள் மட்டுமே கிடைக்கின்றன. தற்போது தேவை இருந்தும் பூ உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய தோட்டக்கலை வாரிய இயக் குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது:
பசுமை குடில்களில் வெப்பம் அதிகரித்து காற் றில் ஈரப்பதமும் மாறி, மாறி வருகிறது. தற்போது கோடைகால நோய் தாக்கத் தால் உற்பத்தி பாதித்துள்ளது.
ஆண்டில் ஏப். முதல் ஜூன் வரையிலான மாதத்தில் அதிக முகூர்த்த நாட்கள் வருவதால் அப்போது பூக்கள் தேவை அதிகமாக இருக்கும். தற்போது ஒரு கட்டு ரோஜா, 200 ரூபாய் கிரசாந்திமம் 200, ஜெர்புரா 100 ரூபாய், என விற்கிறது. புதிய செடிகளை விட பழைய செடிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தரமான மலர்கள் இல்லாததால் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.